/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு எண்ணும் மையங்களில் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையங்களில் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு
ஓட்டு எண்ணும் மையங்களில் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு
ஓட்டு எண்ணும் மையங்களில் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு
ADDED : மே 23, 2024 05:35 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை ஓட்டு எண்ணும் மையங்களைதலைமை தேர்தல் அதிகாரி நேற்று ஆய்வுசெய்தார்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் கடந்தமாதம்19ம் தேதி நடந்து முடிந்தது. 23 தொகுதியில் பதிவான மின்னணுஓட்டுப்பதிவு இயந்திரங்கள், லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது.
போலீசார், மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் 4 ம் தேதி ஓட்டு எண்ணிக்கைநடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வளாகம் முழுதும் 120 சி.சி.டி.வி. பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓட்டு எண்ணும் அறையிலும், ஒப்புகை சீட்டு இயந்திரம் எண்ணும் மையம் உட்பட 93 ஓட்டு எண்ணிக்கை மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மகளிர் பொறியியல் கல்லுாரியில் தனியாக 4 மேசைகளுடன் கூடிய தபால் ஓட்டு அறை அமைத்துள்ளனர்.
இரண்டு ஓட்டு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை, தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், கலெக்டர் குலோத்துங்கன், ஓட்டு எண்ணும் மைய நோடல் அதிகாரி சுதாகர், துணை தலைமை தேர்தல் அலுவலர் தில்லைவேல் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

