/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டண பாக்கியை செலுத்த அறிவுறுத்தல்
/
மின் கட்டண பாக்கியை செலுத்த அறிவுறுத்தல்
ADDED : ஆக 23, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள் மின் கட்டண பாக்கியை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்க மின்துறை அறிவுறுத்தியுள்ளது.
மின்துறை கிராமம் வடக்கு பகுதி முதன்மை இன்ஜினியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
மின்துறை கிராமம் வடக்கு கோட்டத்திற்கு கீழ் இயங்கும் வில்லியனுார், பூமியான்பேட்டை, லாஸ்பேட்டை, கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனுார், காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண பாக்கியை பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

