தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டு எண்ணிக்கை மையம் ஏற்பாடுகள் தீவிரம்

ஓட்டு எண்ணிக்கை மையம் ஏற்பாடுகள் தீவிரம்

ஓட்டு எண்ணிக்கை மையம் ஏற்பாடுகள் தீவிரம்


ADDED : மார் 26, 2024 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஓட்டு எண்ணும் மையமான லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஏப். 19ம் தேதி நடக்கிறது. ஆண் வாக்காளர்கள் 4,79,329 பேரும், பெண் வாக்காளர்கள் 5,41,437, மூன்றாம் பாலினத்தினர் 148 பேர் உள்ளனர். இதுதவிர, 308 சர்வீஸ் ஓட்டுகளும், 363 வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரி முழுதும் 967 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடப்பதற்கு தேவையான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரம், வி.வி.பாட் இயந்திரங்கள் தயாராக உள்ளது.

தேர்தல் துறை அலுவலக ஸ்ட்ராங் ரூமில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுப்பதிவுக்கு முன்னதாக, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் தற்காலிக 2 ஸ்ட்ராங் ரூமிற்கு மாற்றப்படும். அங்கிருந்து ஓட்டுப்பதிவு நடக்கும் மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.

இதற்காக மகளிர் பொறியியல் கல்லுாரி வளாக ஸ்ட்ராங் ரூம்களில் வைக்க தேவையான ரேக்குகள், மேஜைகள் நேற்று கொண்டுவரப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வளாகம் சுவர்களில் வண்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us