/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி டிரான்ஸ்வாரஸ் இசைகுழுவிற்கு இன்டர் கான்டினென்டல் மியூசிக் விருது
/
புதுச்சேரி டிரான்ஸ்வாரஸ் இசைகுழுவிற்கு இன்டர் கான்டினென்டல் மியூசிக் விருது
புதுச்சேரி டிரான்ஸ்வாரஸ் இசைகுழுவிற்கு இன்டர் கான்டினென்டல் மியூசிக் விருது
புதுச்சேரி டிரான்ஸ்வாரஸ் இசைகுழுவிற்கு இன்டர் கான்டினென்டல் மியூசிக் விருது
ADDED : செப் 15, 2024 07:18 AM

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் இன்டர் கான்டினென்டல் மியூசிக் விருது போட்டிக்கு, ஐரோப்பிய, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்கள், தங்களது இசைப்படைப்புகளை அனுப்பி இருந்தனர். இந்தியாவில் இருந்தும் இசை படைப்புகள் பகிரப்பட்டன.
இதில், கணீர் குரலுடன் 10.24 நிமிட பின்னணி இசையுடன் காட்சிகளாகவும் ஓடும் குறும்பட இசை ஆல்பத்தை சமர்பித்த புதுச்சேரியை சேர்ந்த பாரதியார் பல்கலைக் கூட முன்னாள் முதல்வர் போஸின், டிரான்ஸ்வாரஸ் இசைகுழுவிற்கு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் பெருமைமிகு இன்டர் கான்டினென்டல் மியூசிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்ட இசை குறும்படம், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் புகழ்பெற்ற கணேச குமார பாஷிமாம் பாடல் வரிகளுடன் விரிய, வயலின், கிட்டார், புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா, கஞ்சிராவின் ரிதம் பாடலுக்கு அழகு சேர்த்துள்ளன.
நடன விளக்க காட்சியில் நடன கலைஞர் வித்யா அரசு, அவரது சீடர்களின் பரத நாட்டிய காட்சிகளும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளது.
நாம், பாரதியார் பல்கலைக்கூட முன்னாள் முதல்வர் போஸ்சினை சந்தித்து வாழ்த்து சொன்னபோது, கர்நாடகா சங்கீதத்தில் மும்முரமாக இருந்த, சர்வதேச விருதை பற்றி பேச ஆரம்பித்ததும், முகமலர்ச்சியுடன் பேசத் தொடங்கினார்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் மார்ச் மாதம் 24 ம் தேதி 1776 ம் ஆண்டு பிறந்தார். அத்தனை மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனைகள் எழுதியவர் முத்துசுவாமி தீட்சிதர். ஆழமான, ஆத்மார்த்தமான பாடல்கள் - அரிதான ராகங்களிலும் கூட கீர்த்தனைகளை செய்திருக்கிறார். தன் பாடல்களில் அத்வைதத்தை முன்னிறுத்தியவர்.
இவர் எழுதிய கீர்த்தனைகளில் 'கணேச குமார பாஷிமாம் அதிகம் அறியப்பட்ட பாடல். அதைத்தான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் இன்டர் கான்டினென்டல் மியூசிக் விருதிற்கு நான் பாட, அதை விழுப்புரம் பனமலை பல்லவர் காலத்து தாளகிரீஸ்வரர் கோவிலில் படமாக்கி டிரான்ஸ்வாரஸ் இசைக்குழு சார்பில் அனுப்பி இருந்தோம். இந்த குறும்பட இசைக்கு இந்த உயரிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்த விருதிற்கான பெருமை முத்துசுவாமி தீட்சிதரை சேரும். இது மெல்லிசை ராகமான செஞ்சுருட்டியில் அமைக்கப்பட்ட முத்துசுவாமி தீட்சிதரின் ரத்தினத்திற்கு நாங்கள் செய்யும் மரியாதை. கர்நாடக இசை முறையின் இந்த பாரம்பரிய பாடல் தற்போது சர்வதேச பார்வையாளர்களை அடைந்துள்ளதால் இந்த விருது எனக்கு மிகவும் மதிப்புமிக்கது. இந்த விருதினை எனக்கு கர்நாடக இசை பயிற்சி அளித்த குருக்கள் குறிப்பாக குன்னம்குளம் டேவிட் பாகவதருக்கு, விருது பெற காரணமாக பின்னணியில் இருந்த இசை கலைஞர்கள், தொழில்நுட்ப குழுவினருக்கு சமர்பிக்கின்றேன். என்றார்.
விருது வென்ற போஸ், டிரான்ஸ்வாரஸ் இசைகுழுவினர் முன்னணி பாடகர். அக்குழுவின் வாயிலாகவே போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த இசை பாடலுக்கு ஷாஜூ வாடியில்- வயலின், மியூசிக் புரோகிராமர், ராஜீஷ் ராஜகோபால்-கீபோர்டு, அபின் சாகர்-கிட்டார், சசி கிருஷ்ணா-பாஸ் கிட்டார், ஆதி ஸ்வருப்-புல்லாங்குழல், ராமகிருஷ்ணன் பகதாரா-தபேலா, நாராயணன் பிரகாஷ்-மிருதங்கம், தனுஷ்-டிரம்ஸ் மூலம் இணைந்து பலம் சேர்த்துள்ளனர்.