ADDED : ஆக 05, 2026 07:53 PM
புதுச்சேரி: புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், பல்கலைக்கழகம் இணைந்து ‘தேர்தல்களில் தவறான தகவல்கள் மற்றும் திட்டமிட்ட தவறான தகவல் பரப்பலை எதிர்கொள்வது’ என்ற தலைப்பில் சர்வதே மாநாட்டை நடத்தின.
பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடந்த மாநாட்டிற்கு, புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ரவிபிரகாஷ் வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கி, பேசுகையில், உண்மையை விட பொய்யான தகவல்கள் வேகமாக பரவுகின்றன. ஏ.ஐ., தொழில்நுட்பம் அதன் பரவலை விரைவு படுத்தியுள்ளது.
தவறான தகவல்கள் மற்றம் திட்டமிட்ட தவறான தகவல்கள் வாக்காளர்களிடையே பிளவை ஏற்படுத்தி அவர்களின் உணர்வுகளை பாதிக்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் காணொளிகள், செயற்கை ஊடகங்கள், டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கங்கள் ஜனநாயக நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கூடும்.
2047 ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய விழிபுணர்வு உள்ள குடிமக்கள், பொறுப்புள்ள ஊடகங்கள் ஆதாரப்பூர்வமான பொது தகவல் வெளீயிடு அவசியம். உண்மையை பாதுகாப்பது ஒவ்வொறுவரின் பொறுப்பு என்றார்.
மாநாட்டில் பேராசிரியர்கள் சேவுகன், சுவைப் முகமது ஹனீ, அருள்செல்வன், ஜான்சன், சக்திவேல், வெங்கட்ராவ், சிவம், உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆதர்ஷ் ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசினர். தொடர்ந்து கலந்துரையாடல் நடந்தது.
