/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் சர்வதேச மருத்துவ கருத்தரங்கு
/
பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் சர்வதேச மருத்துவ கருத்தரங்கு
பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் சர்வதேச மருத்துவ கருத்தரங்கு
பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் சர்வதேச மருத்துவ கருத்தரங்கு
ADDED : ஆக 23, 2024 06:53 AM

புதுச்சேரி: பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் நடந்த சர்வதேச மருத்துவ கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட பல்துறை சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர்.
கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் தகவல் பரிமாற்றம், மனப்பான்மை மற்றும் ஒழுக்கவியல் குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல், கிரேஸ் -2024 என்ற தலைப்பில் நடந்தது. முதல்வர் ரேணு பாய் வர்கீஸ் வரவேற்றார்.
கருத்தரங்கில் மருத்துவம் கற்பிக்கும் மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்களுக்கு மனப்பான்மை, ஒழுக்கவியல் மற்றும் தகவல் பரிமாற்றம் போன்றவற்றை மருத்துவ மாணவர்களுக்கு சரியான முறையில் கற்றுக் கொடுக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மும்பை கெம் மருத்துவமனை அவிநாஸ் சுபே, துவக்க உரையாற்றினார்.
சிறப்பு அமர்வுகளில் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனை டாக்டர் ரீனா ஜார்ஜ், விசாகப்பட்டினம் கீதம் பல்கலைக்கழக டாக்டர் கீதாஞ்சலி பத்மநாபன், பெங்களூரு புனித ஜான்ஸ் ஆராய்ச்சி நிலைய டாக்டர் ஒலிண்டா டிம்ஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பல்வேறு சிறப்பு பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவ மாணவர்களிடையே நல்ல மனப்பான்மை, ஒழுக்கம் போன்ற நல்ல திறன்களை பயிற்றுவிப்பதில் உள்ள வழிமுறைகள், பல்வேறு சவால்கள் மற்றும் அதற்கு தீர்வுகள் குறித்து சிறப்பு உரையாற்றினர். பிம்ஸ் மருத்துவக் கல்வி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நாயர் இக்பால் நன்றி கூறினார்.