ADDED : பிப் 23, 2025 05:38 AM
புதுச்சேரி : கலை இலக்கியப் பெருமன்றம், சாரதா கங்காதரன் கல்லூரி சார்பில், உலக தாய்மொழி நாள் விழா நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் பாபு தலைமை தாங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர் சீனு தண்டபாணி வரவேற்றார். கலை இலக்கிய பெருமன்ற பொதுச்செயலாளர் பாலகங்காதரன் நோக்கவுரையாற்றினார்.
தாகூர் கலை கல்லுாரி பிரஞ்சு துறை பேராசிரியர் ஜென்னி பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். காமராஜர் கலை கல்லுாரி பேராசிரியர் சவுந்தரவள்ளி வாழ்த்துரை வழங்கினார். மாணவி சிவ ஸ்ரீ நன்றி கூறினார். கட்டுரை, கவிதை, பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. தமிழ் ஆராய்ச்சியாளர் அறிவன், கார்த்திக், சூரிய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.