/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திரா காந்தி மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா
/
இந்திரா காந்தி மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா
இந்திரா காந்தி மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா
இந்திரா காந்தி மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா
ADDED : மே 12, 2024 05:00 AM

புதுச்சேரி: இந்திராகாந்தி மருத்துவக்கல்லுாரியில், சர்வதேச செவிலியர் தின விழாவில் ஏராளானோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி, இந்திராகாந்தி மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், சர்வதேச செவிலியர் தின விழா நேற்று நடந்தது. விழாவை, செவிலியர் பொறுப்பு தனி அதிகாரி சுமதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். வார்டு பொறுப்பாளர் ஜான்சி வரவேற்றார்.
விழாவில், உள்ளிருப்பு அதிகாரி அருண், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேஷ், நிர்வாக அதிகாரி முத்துலிங்கம், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், டீன் ராமச்சந்திர பாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, இயக்குநர் உதயசங்கர் கலந்து கொண்டு, பேசினார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. செவிலியர் அதிகாரி சபாபதி, நன்றி கூறினார்.