ADDED : மே 18, 2024 06:25 AM

புதுச்சேரி: கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினவிழா கல்லுாரி அரங்கில் நடந்தது.
பங்கு தந்தை ஜோபி ஜார்ஜ் சிறப்பு பிரார்த்தனை செய்தார். மருத்துவக் கல்லுாரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். பிம்ஸ் செவிலியர் துறை கண்காணிப்பாளர் கலைவாணி முன்னிலை வகித்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், செவிலியர் கல்லுாரியின் முதல்வர் அன்னால் ஏஞ்சலின் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கடந்த 10 ஆண்டுகளாக பிம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் மூத்த செவிலியர்களுக்கு கல்லுாரி முதல்வர் அனில் பூர்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் மருத்துவ பேராசிரியர் ரேணு, துணை முதல்வர் ஸ்டாலின், செவிலியர் கல்லுாரியின் பேராசிரியர்கள் கிறிஸ்டின் பிரிஜித், பல்வேறு துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
