/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரசாயன கழிவுநீர் குறித்து விசாரணை
/
ரசாயன கழிவுநீர் குறித்து விசாரணை
ADDED : மார் 02, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மேட்டுப்பாளையம், தொழில்பேட்டை, பாரதி புரம் அருகே உள்ள வாய்க் காலில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதும், அவ்வழியே செல்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாக, மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர்.
அந்த வாய்க்காலில், வாகனத்தின் மூலம், ரசாயண கழிவுநீரை ஊற்றி சென்றுள்ளனர். ரசாயன கழிவுநீரை ஊற்றி சென்ற நபர்கள் யார் என மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.