தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் அருகே இறந்த இருவர் குறித்து விசாரணை

வில்லியனுார் அருகே இறந்த இருவர் குறித்து விசாரணை

வில்லியனுார் அருகே இறந்த இருவர் குறித்து விசாரணை


ADDED : ஜூன் 24, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2024 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வில்லியனுார் அருகே இறந்த இருவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் சாலையில் உள்ள ஓட்டலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சுரேஷ், 55; வேலை செய்து வந்தார். கடந்த 20ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் அவர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் குறித்த வேறு எந்த தகவலும் தெரியவில்லை.

மேலும், வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே 50 வயது முதியவர் நேற்று முன்தினம் உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவரை அங்கிருந்தவர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை.

இறந்த இருவர் குறித்து வில்லியானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us