/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோகா பண்பு பயிற்சி முகாமில் பங்கேற்க சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு
/
யோகா பண்பு பயிற்சி முகாமில் பங்கேற்க சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு
யோகா பண்பு பயிற்சி முகாமில் பங்கேற்க சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு
யோகா பண்பு பயிற்சி முகாமில் பங்கேற்க சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு
ADDED : மே 04, 2024 07:07 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை துவங்கும் யோகா பண்பு பயிற்சி முகாமில் பங்கேற்க, சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, இ.சி.ஆர் லாஸ்பேட், சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில், சமர்ப்பணம் சேவை மையம் மற்றும் சிவராம்ஜி யோகா மையம் இணைந்து நடத்தும், இருபாலருக்குமான, யோகா பண்பு பயிற்சி முகாம், நாளை 5ம் தேதி துவங்குகிறது. முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது.
இதில் யோகாசனம், பிராணயாமம் பயிற்சி, பாரம்பரிய மற்றும் மகிழ்ச்சியூட்டும் விளையாட்டுகள், புராண மற்றும் தேசபக்தி கதைகள், தேச தலைவர்கள் வாழ்க்கை வரலாறு, ஓவியம், பெயிண்டிங், கராத்தே, வில்கலை பயிற்சி, தற்காப்பு பயிற்சிகள், தேசபக்தி மற்றும் பக்தி பாடல்கள், வினாடி வினாபோட்டி ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முகாமில், 8 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் - சிறுமியர் அனுமதிக்கப்பட உள்ளனர். அனுமதி இலவசம்.
பயிற்சி முகாம் வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. பயிற்சியில் சேருவதற்கான முன்பதிவு, சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது. இன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, முன்பதிவு நடக்கிறது.
முன்பதிவு செய்ய விரும்புவோர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -3, பிறந்த பதிவு, ஆதார்கார்டு ஜெராக்ஸ் ஆகியவை எடுத்து வர வேண்டும். இது குறித்து, 90805 65523, 94433 28729, 94880 51100, 73976 22510 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், சிவராம்ஜி யோகா மையம், எண்: 25, மெயின் ரோடு, கிருஷ்ணா நகர், லாஸ்பேட், புதுச்சேரி - 605008, எனும் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.