ADDED : ஜூலை 30, 2026 05:31 PM
புதுச்சேரி: புதுச்சேரியில், புதிய ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
டில்லியில் உள்ள தேசிய போலீஸ் பயிற்சி பள்ளியில், பயிற்சி பெற்ற 2025ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அகில இந்திய அளவில் களப்பயணம் மேற்கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, 22 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ளனர்.
அவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று போலீஸ் தலைமையக கருத்தரங்க கூடத்தில் நடந்தது. டி.ஜி.பி., ஷாலினி சிங் தலைமை தாங்கினார்.
டி.ஐ.ஜி.,க்கள் சத்தியசுந்தரம், ராஜிவ்குப்தா, சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், ராகவ், திவ்யா, லட்சுமி சவுஜன்யா ஆகியோர், புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்ட போலீசாரின் பணிகளை விளக்கினர்.
தொடர்ந்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குழுவினர் கவர்னர் கைலாஷ்நாதனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
