sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் வரவு செலவு கணக்கில் முறைகேடு: 7 பேர் மீது வழக்குப் பதிவு

/

கோவில் வரவு செலவு கணக்கில் முறைகேடு: 7 பேர் மீது வழக்குப் பதிவு

கோவில் வரவு செலவு கணக்கில் முறைகேடு: 7 பேர் மீது வழக்குப் பதிவு

கோவில் வரவு செலவு கணக்கில் முறைகேடு: 7 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : ஏப் 25, 2024 03:33 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வம்பாகீரப்பாளையத்தில் கோவில் வரவு-செலவு கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் 200 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி, துலுக்கானத்தம்மன், வழி மாரியம்மன் மற்றும் வேதவனேஸ்வரர் கோவில்கள் உள்ளன.

இக்கோவில்கள் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு குலதெய்வமாக உள்ளது. இதற்கிடையே கடந்த 2020-22ம் ஆண்டு இக்கோவில்களில் வரவு- செலவு கணக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுத்தது.

இதுகுறித்து வம்பா கீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் தரப்பினர் சப் கலெக்டரிடம் அளித்த புகார் மனு, அடிப்படையில் தாசில்தார் விசாரணை நடத்தினார். .

அதில், இக்கோவில்களில் வரவு-செலவு கணக்கில் முறைகேடுகள் நடந்திருப்பதும், கோவில் நகைகள், பழங்கால செப்பு, பித்தளை பொருட்களை திருடி விற்பனை செய்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, கோர்ட் உத்தரவின் பேரில் ஓதியஞ்சாலை போலீசார் கோவில் வரவு-செலவு கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மாரியப்பன், 52; ராஜ்குமார், 48; தணிகாசலம், 60; வாழுமுனி, 40; கார்த்திக், 41; மதன், 50; மற்றும் பன்னீர் (எ) சுவாமிநாதன், 55; ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us