/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ஈஷா யோகா பயிற்சி வகுப்பு நாளை துவக்கம்
/
புதுச்சேரியில் ஈஷா யோகா பயிற்சி வகுப்பு நாளை துவக்கம்
புதுச்சேரியில் ஈஷா யோகா பயிற்சி வகுப்பு நாளை துவக்கம்
புதுச்சேரியில் ஈஷா யோகா பயிற்சி வகுப்பு நாளை துவக்கம்
ADDED : மே 28, 2024 03:42 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஈஷா யோகா பயிற்சி வகுப்புகள் நாளை ( 29ம் தேதி) துவங்கி 7 நாட்கள் நடக்கிறது.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் உள்ள ஆறுமுகா திருமண நிலையத்தில் ஈஷா யோகா பயிற்சி வகுப்பு நாளை (29ம் தேதி) துவங்கி வரும் 4ம் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. வகுப்பு காலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது.
முதல் நாள் வகுப்பு நாளை அறிமுக உரையுடன் துவங்குகிறது. பயிற்சி வகுப்பில், சக்தி வாய்ந்த ஷாம்பவி, மஹா முத்ரா பயிற்சி, உடல் நலம், மனவளம், ஆன்ம பலம் பெற, நாட்பட்ட நோய்களில் இருந்து, முழுமையாக விடுதலை பெறுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
மேலும், 8300016000, 9443277486, 9443275040 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.