sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீனவர்களுக்கு விரைவில் இஸ்ரோ டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு: அதிக மீன் கிடைக்கும் இடங்களை துல்லியமாக அறியலாம்

/

மீனவர்களுக்கு விரைவில் இஸ்ரோ டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு: அதிக மீன் கிடைக்கும் இடங்களை துல்லியமாக அறியலாம்

மீனவர்களுக்கு விரைவில் இஸ்ரோ டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு: அதிக மீன் கிடைக்கும் இடங்களை துல்லியமாக அறியலாம்

மீனவர்களுக்கு விரைவில் இஸ்ரோ டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு: அதிக மீன் கிடைக்கும் இடங்களை துல்லியமாக அறியலாம்


ADDED : ஆக 23, 2024 06:41 AM

Google News

ADDED : ஆக 23, 2024 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மீனவர்களுக்கு இஸ்ரோ வடிவமைத்த டிரான்ஸ்பாண்டர்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மீனவர்கள் அதிக மீன் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள், ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து கொள்ளுவதுடன், ஆபத்து காலங்களில் உதவிகளையும் பெற முடியும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்திட மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்பாண்டர் என்ற தகவல் தொடர்பினை முழுக்க முழுக்க மீனவர்களுக்காக உருவாக்கியுள்ளது.

நிலப்பரப்பிலிருந்து இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.

இக்கருவியை படகில் பொருத்தி, புளூடூத் வாயிலாக இணைத்து மொபைலில் உள்ள செயலி வழியாக தகவல்களையும் பெறலாம்.

இந்த டிரான்ஸ்பாண்டர்கள் புதுச்சேரி மீனவர் களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 3,047 டிரான்ஸ்பாண்டர்கள் புதுச்சேரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இவை பெரிய விசைப்படகுகள் 582, இயந்திரம் பொருத்தப்பட்ட மோட்டார் மீன்பிடி படகுகள் 2,465 என பிரித்து பொருத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக 200 பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர் பொருத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான முழு செலவினை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது.

இந்த டிரான்ஸ்பாண்டர் ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த டிரான்ஸ்பாண்டர் மீன்பிடி விசைப்படகில் பொருத்துவதால், மீன்பிடி படகுகள் புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் இருக்கும்போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும் மற்றும் மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும்.

அதேபோன்று, கரையிலுள்ள மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, அவசர செய்தியை படகிற்கு அனுப்பவோ இயலும்.

அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள் ஆகியவற்றை அவ்வப்போது படகிற்கு அனுப்ப இயலும்.

மேலும், இக்கருவியின் மூலம் ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், படகு கடலில் பயணம் செல்லும் பாதையையும் கண்டறிய இயலும்.

மாநில அரசின் கன்ட்ரோல் ரூம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட விசைப்படகு களுக்கு அனைத்து உதவி களும், வழிகாட்டுதல்களும் தரையில் இருந்தே கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us