ADDED : ஆக 04, 2026 06:35 PM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: பிரதமரின் கல் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் மணவெளி தொகுதியில் ராமு எம்.எல்.ஏ., 25 பயனாளிகளுக்கு ஆணை வழங்கினார்.
பிரதமரின் கல் வீடு திட்டத்தின் கீழ், புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், மணவெளி தொகுதியில் ஆணை வழங்கும் நிகழ்ச்சி, தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. முதல் தவணையாக 2.75 லட்சம் ரூபாய் வீதம், 25 பயனாளிகளுக்கு ஆணையை ராமு எம்.எல்.ஏ., வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வாளர் மதியழகன், அதிகாரிகள், த.வெ.க., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
