தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஐ.டி., பார்க் அமைக்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் சிவா கோரிக்கை

ஐ.டி., பார்க் அமைக்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் சிவா கோரிக்கை

ஐ.டி., பார்க் அமைக்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் சிவா கோரிக்கை


ADDED : ஆக 14, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் இந்தாண்டு ஐ.டி., பார்க் அமைக்க, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, எதிர்க்கட்சித்தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

சட்டசபையும், தலைமைச் செயலகமும் ஒரே இடத்தில் இருக்கும் நிலையில் அமைக்க வேண்டும். விடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனைப்பட்டா, காப்பீடு திட்டம் கொண்டுவர வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும்.

ஆதிதிராவிட நலத்துறைக்கு ரூ. 488 கோடி சிறப்புக்கூறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நேரிடையாக ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டும் ரூ. 208 கோடி ஒதுக்கப்படுகிறது. இதை கண்காணிக்க் குழு அமைக்கப்படும் என்று கடந்த கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

அமைச்சர் 189 புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு, 9 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அந்த தொழிற்சாலைகள் எங்கே வந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்.

புதுச்சேரியில் தொடர்ந்து ஐ.டி., பார்க் அமைக்க கோரிக்கை வைத்து வருகிறோம். மேட்டுப்பாளையத்தில் அதற்காக இடம் ஒதுக்கப்பட்டும் ஐ.டி., பார்க் அமைக்க அரசு முனைப்பு காட்டவில்லை.

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க இந்த ஆண்டு ஐ.டி., பார்க் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us