sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரிக்கான திட்டங்களை தடுத்தவர் நாராயணசாமி

/

புதுச்சேரிக்கான திட்டங்களை தடுத்தவர் நாராயணசாமி

புதுச்சேரிக்கான திட்டங்களை தடுத்தவர் நாராயணசாமி

புதுச்சேரிக்கான திட்டங்களை தடுத்தவர் நாராயணசாமி


ADDED : ஏப் 11, 2024 04:04 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., அன்பழகன் காட்டம்

புதுச்சேரி> புதுச்சேரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தனை ஆதரித்து, மணவெளி தொகுதியில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் பிரச்சாரம் செய்து பேசியதாவது;

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பா.ஜ., ரேஷன் கடை திறக்க 3 ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லை. நுாறுநாள் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவோம் என அறிவித்து 50 நாட்கள் கூட வழங்கவில்லை.மின்துறையை தனியாருக்கு விற்பனை செய்து, பிரிபெய்ட் திட்டம் கொண்டுவர உள்ளனர்.இத்திட்டம் மக்களை வஞ்சிக்கும் செயல்.

பா.ஜ.,வுக்கு ஓட்டு அளித்தால் ஜனநாயக நாடாக உள்ள இந்தியா எதிர்காலத்தில் சர்வாதிகார நாடாக மாற்றப்படும். காங்., கட்சி ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் தருவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

புதுச்சேரியில் 4 லட்சம் குடும்பம் உள்ளது. ஒராண்டிற்கு 4000 கோடி தேவை. செயல்படுத்த முடியாத கவர்ச்சி திட்டங்களை காங்., கூறி மக்களை ஏமாற்றுகிறது.மத்திய அமைச்சராக நாராயணசாமி இருந்தபோது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, துறைமுக அபிவிருத்தி திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்படுத்த விடாமல் தடுத்தார்.

வணிகர்கள் எதிர்த்தபோது முதல் ஆளாக ஜி.எஸ்.டி. யை அறிமுகப்படுத்தியவர். மத்திய இணை அமைச்சராக இருந்த நாராயணசாமி, ஒரு நிமிடத்தில் மாநில அந்தஸ்து வழங்கி இருக்கலாம். புதுச்சேரிக்கான பல உரிமைகளை தடுத்து நிறுத்தி பெருமை நாராயணசாமிக்கு உண்டு.

மணவெளி தொகுதியில் ஆட்சியாளர்கள் துணையுடன், கடற்கரை பகுதி ஆக்கிரமிப்பும், ஆற்றுப்படுக்கையில் மணல் கடத்துகின்றனர். சட்டவிரோதமாக கடற்கரை ஓரம் பல கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். எனவே தேசிய கட்சிகளாக காங்., பா.ஜ.வுக்கு மக்கள் சரியானபாடம் புகட்ட வேண்டும் என பேசினார்.






      Dinamalar
      Follow us