ADDED : ஜூன் 17, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி ஜன கல்யாண் சபா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் சேவைகள் இயக்ககம் மற்றும் உயர் தொழிற்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் வல்லுநர்கள் கூட்டம் இன்று (18ம் தேதி) மாலை 6 மணிக்கு நகராட்சி மேரி அரங்கில் நடக்கிறது.
கூட்டத்தை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைக்கிறார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார். அமைச்சர் நமச்சிவாயம், எம்.பி.,க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், விக்னேஷ் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுகான், அரசு செயலர்கள் யாசின் சவுத்ரி, முகமது அஹ்சன் அபித் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்தில், அரசின் முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் சுகாதாரத் திட்டங்களை மதிப்பீடு செய்து, வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
