sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு


ADDED : ஆக 04, 2024 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2024 04:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுாரில் நடந்து சென்ற மூதாட்டியின் கம்மலை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனுார் புதுபேட் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, 70. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. முத்துலட்சுமி மட்டும் தனியாக வசிக்கிறார்.

வீட்டு வேலை செய்து வரும் முத்துலட்சுமி, நேற்று மாலை தில்லை நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர், முத்துலட்சமி காதில் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

இதில் முத்துலட்சுமியின் காது கிழிந்து ரத்தம் சொட்டியது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, நகையை பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us