ADDED : மே 06, 2024 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் பேச்சு கொடுத்து 5 சவரன் நகையை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், சாலாமேடு, சர்வேயர் நகரைச் சேர்ந்தவர் பூவராகவன் மனைவி உமாதேவி, 50; இவர், நேற்றிரவு 7:30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றார்.
விண் நகர் அருகே சென்றபோது 45 வயது மதிக்கத் தக்க மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் உமாதேவியிடம் பேச்சு கொடுத்து, அவர் கழுத்திலிருந்த 5 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினார்.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.