தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செல்வகணபதி எம்.பி.,க்கு, ஜிப்மர் தினக்கூலி ஊழியர்கள் நன்றி

செல்வகணபதி எம்.பி.,க்கு, ஜிப்மர் தினக்கூலி ஊழியர்கள் நன்றி

செல்வகணபதி எம்.பி.,க்கு, ஜிப்மர் தினக்கூலி ஊழியர்கள் நன்றி


ADDED : ஜூலை 08, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 07:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: செல்வகணபதி எம்.பியை, ஜிப்மர் தினக்கூலித் ஊழியர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

புதுச்சேரி ஜிப்மரில் பணிபுரியும் தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்திட  செல்வகணபதி எம்.பி., பல்வேறு முயற்சிளை மேற்கொண்டார். இது தொடர்பாக, கடந்த மே மாதம் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைக்கு பின் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது,  தினக்கூலி ரூபாய் 693 ல் இருந்து 948 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து செல்வகணபதி எம்.பி., பேசுகையில்‘‘ கூட்டு உரையாடல், விடாமுயற்சி மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உறுதியான மனப்பான்மை ஆகியவற்றின் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமானது என்றார். இந்த ஊதிய உயர்வு கடந்த மே 20ம் தேதி முதல் தினக்கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் அளிப்பதோடு, இதே போன்ற பிற நிறுவனங்களிலும் நியாயமான ஊதிய நடைமுறைகளை அமல்படுத்துவதற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஜிப்மர் தினக்கூலித் தொழிலாளர்கள், செல்வகணபதி எம்.பி.,யை, சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us