ஜிப்மரில் பச்சிளங்குழந்தைகளுக்கான ரத்த பரிசோதனை ஆய்வகம் துவக்கம்
ஜிப்மரில் பச்சிளங்குழந்தைகளுக்கான ரத்த பரிசோதனை ஆய்வகம் துவக்கம்
ADDED : ஆக 04, 2026 07:25 PM
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில், பச்சிளங்குழந்தைகளுக்கான ரத்த பரிசோதனை ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவமனை சார்பில், அனைத்து பச்சிளங்குழந்தைகளுக்கான ரத்த பரிசோனை திட்டம் மற்றும் ரத்த பரிசோதனை ஆய்வகம் நேற்று திறக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் சாகா வினோத்குமார் துவக்கி வைத்தார்.
ஜிப்மர் இயக்குனர் வீர் சிங்நேகி, குழந்தைகள் மருத்துவத் துறை பேராசிரியர் ரீனாகுலாட்டி, பச்சிளம் குழந்தைகள் மருத்துவ துறை தலைவர் நிஷாத் பிளக்கல், உயிர் வேதியியல் துறை தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வகம் மூலம் பிறக்கும்போது ஆரோக்கியமாக தோன்றும் சில குழந்தைகளுக்கு அறிகுறிகள் வெளிப்படுவற்கு முன்பே சில மரபியல், வளர்சிதை மாற்ற, நாளமில்லா சுரப்பி மற்றும், பிறவிக்குறைபாடுகளை கண்டறிய முடியும்.
துவக்க நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, சிகிசைகளை துவக்குவதன் மூலம், அறிவுத் திறன்குறைபாடு, வளர்ச்சி தாமதம், வலிப்பு, உறுப்பு சேதம் மற்றும் உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்க முடியும், என, ஜிப்மர் நிர்வாகம் சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
