தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர் மருத்துவக் குழு இலவச மருத்துவ முகாம் 

ஜிப்மர் மருத்துவக் குழு இலவச மருத்துவ முகாம் 

ஜிப்மர் மருத்துவக் குழு இலவச மருத்துவ முகாம் 


ADDED : ஜூன் 22, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழு மற்றும் சரவி கிரீன்ஸ் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

கோட்டக்குப்பம் கடற்கரை சாலையில் உள்ள சரவி கிரீன்ஸ் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழு மற்றும் சரவி கிரீன்ஸ் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், சரவி கிரீன்ஸ் நிறுவனர் தினேஷ், மற்றும் முன்னாள் வங்கி மேலாளர் ஆறுமுகம் பங்கேற்றனர். முகாமில்,  ஜிப்மர் டாக்டர்கள் புகழ்வேள், ராம்குமார், மரினா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு ​பொது மருத்துவம், முதியோர் நல மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவம்,​ நுரையீரல், தோல் வியாதி, கண், காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்களுக்கான பரிசோதனைகள், பிசியோதெரபி சிகிச்சைகள் மற்றும்​ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முகாமில் இலவச இரத்த பரிசோதனை, சர்க்கரை வியாதி கண்டறிதல், இரத்த சோகை மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிதலுக்கான சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாம், நேற்று காலை 9.00 மணிக்குத் துவங்கி மதியம் 1.00 மணி வரை நடந்தது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us