/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் ஓ.பி., பிரிவு இன்று இயங்காது
/
ஜிப்மர் ஓ.பி., பிரிவு இன்று இயங்காது
ADDED : ஏப் 11, 2024 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று 11ம் தேதி புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் அலுவலக செய்திகுறிப்பு:
ரம்ஜான் பண்டிகை இன்று 11ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதனையொட்டி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் பிரிவு இன்று மட்டும் இயங்காது. புற நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அவசர பிரிவு சேவை அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

