தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்குகிறது கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு

ஜிப்மர் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்குகிறது கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு

ஜிப்மர் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்குகிறது கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு


ADDED : ஜூலை 20, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: ஜிப்மர் உலகத்தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்குகிறது என கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.

ஜிப்மரில் மருத்துவ நோய் எதிர்ப்பியல் ஆய்வகத்தை திறந்து வைத்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:

புதிய மருத்துவ நோய் எதிர்ப்பியல் ஆய்வகம் ஜிப்மரின் வளர்ச்சியில், முக்கிய மைல் கல் ஆகும். ஒவ்வாமை நோய்கள், பிறவியிலேயே ஏற்படும் நோய் எதிர்ப்பு குறைபாடுகள் மற்றும் பல்வேறு நோய் எதிர்ப்பு மண்டல கோளாறுகளுக்கு துல்லியமான, நவீன பரிசோதனைகள் அவசியம்.

2009ம்  ஆண்டு துவக்கப்பட்ட இத்துறை தென்னிந்தியாவில், மத்திய அரசின் கீழ் இயங்கும்  ஒரே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ நோய் எதிர்ப்பியல் பிரிவாக திகழ்கிறது.ஜிப்மரில் உயர்தர நோய் எதிர்ப்பியல் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

தென்னிந்தியா மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இருந்து நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். இந்த ஆய்வகம் நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்வதுடன், ஆராய்ச்சி, மருத்துவ கல்விக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும்.ஜிப்மர் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை உருவாக்கி, உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்குகிறது. இந்த புதிய ஆய்வகம், சிக்கலான நோய் எதிர்ப்பு மண்டலப நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதம்.

இவ்வாறு அவர் பேசினார்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us