ஜிப்மர் எம்.எஸ்.சி., நர்சிங் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தேர்வு முடிவு வெளியீடு
ஜிப்மர் எம்.எஸ்.சி., நர்சிங் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தேர்வு முடிவு வெளியீடு
ADDED : ஜூலை 26, 2026 08:30 PM
புதுச்சேரி: ஜிப்மர் எம்.எஸ்.சி., நர்சிங் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.எஸ்.சி., அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவில் 24, எம்.எஸ்.சி., நர்சிங் 31, எம்.பி.எச். (மாஸ்டர் ஆப் பப்ளிக் ெஹல்த்) 34, பி.பி.டி.என்., (போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் நர்சிங்)19, பி.ஜி.டி.பி.ஜி.எப்., 12, எம்.பி.ஜி.பி. 4, என மொத்தம் 124 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த 15ம் தேதி, பெங்களூரு, புவனேஸ்வர் உள்ளிட்ட 9 இடங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள் மற்றும் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் பிரிவு வாரியான தரவரிசை பட்டியல் ஜிப்மர் இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இவ்வாறு ஜிப்மர் டீன் (அகாடமி) அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
