/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளைஞர்களுக்கு வேலை சுயேட்சை வேட்பாளர் உறுதி
/
இளைஞர்களுக்கு வேலை சுயேட்சை வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 14, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 26 வயது ,சுயேட்சை வேட்பாளராக சதீஷ்குமார் போட்டியிடுகிறார். அவர் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவேன் என கூறி ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
சதீஷ்குமார் கூறும்போது, 'புதுச்சேரியில் 30 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை தேடி வெளியூர் செல்கின்றனர். 25 சதவீதம் பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். 30 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.

