/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆல்பா கல்வி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம்
/
ஆல்பா கல்வி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : பிப் 09, 2025 05:59 AM

புதுச்சேரி: ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த வளாக வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு கல்லுாரி தாளாளர் பாஷிங்கம் வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி, ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் அறிவியல் சார்ந்த படிப்புகளை முடித்த மற்றும் மேற்படிப்பு பயின்று வரும் மாணவர்களுக்கான வளாக வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
கன்னியகோயில் - பாகூர் சாலையில் அமைந்துள்ள ஆல்பா கல்வி வளாகத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமை கல்லுாரி தாளாளர் பாஷிங்கம் துவக்கி வைத்தார்.
காலை 9:00 மணி முதல் 1:00 மணி வரை நடந்த முகாமில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 3 நபர்களை சென்னை மற்றும் கோயம்பத்துார் இ-பப்ளிஷிங் நிறுவனம் தேர்வு செய்து, ரூ.3.5 லட்சம் சம்பளம் வழங்குவதற்கான பணி நியமன ஆணையை வழங்கியது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கல்லுாரி தாளாளர் பாஷிங்கம் வாழ்த்து தெரிவித்தார். கல்லுாரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

