/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கள்ளச்சாராய மரணம்: தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
கள்ளச்சாராய மரணம்: தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய மரணம்: தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய மரணம்: தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 05:17 AM

புதுச்சேரி : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்ததால் தமிழக அரசை கண்டித்தும், புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பழைய பஸ் நிலையம் அருகில் நடந்தது.
கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன் பேசியதாவது;
கள்ளச்சாராயம் குடித்து கடந்த ஆண்டு மரக்காணத்தில் 14 பேரும், தற்போது கள்ளக்குறிச்சியில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் தி.மு.க., ஆதரவுடன் அந்தந்த பகுதி போலீசார் ஆசியுடன் விற்பனை செய்கின்றனர். போலீசின் அலட்சியத்தால் மனித உயிர்களை காவு வாங்குகிறது.
இதற்கு தமிழக கலால் துறை அமைச்சர் மற்றும் போலீஸ் துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் 3 மாநிலம் சம்பந்தப்பட்டு இருப்பதால் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.
பிரச்னையை திசை திருப்ப ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விவகாரத்தில் காங்., கம்யூ., தி.மு.க., கூட்டணி கட்சிகள் வாய் திறக்காமல் உள்ளனர். இங்குள்ள ஆட்சியாளர்களும் வேடிக்கை பார்க்கின்றனர் என பேசினார்.
மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.