/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்மண்டபம் அரசு பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி
/
கல்மண்டபம் அரசு பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 13, 2024 05:14 AM

நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் தியாகராஜ நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி அரசு பள்ளிகளில் மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் தேர்வு எழுதிய 55 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியளவில் மாணவி சந்தியா 453 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி சனோபர் 419 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவர் உத்திரவேல் 413 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
பள்ளியில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்களும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், பள்ளி தலைமை யாசிரியர் வாஞ்சிநாதன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
வாஞ்சிநாதன் கூறுகையில், இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுனையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு நன்றியை தெரவித்து கொள்கிறேன் என்றார்.