/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வருவாய் துறை அதிகாரிகளுடன் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
/
வருவாய் துறை அதிகாரிகளுடன் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
வருவாய் துறை அதிகாரிகளுடன் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
வருவாய் துறை அதிகாரிகளுடன் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
ADDED : மே 28, 2024 03:36 AM
புதுச்சேரி : வருவாய் துறை அதிகாரிகளுடன் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உயர் கல்வி சேர்க்கைக்கு சென்டாக் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வருகின்றது. உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அலைச்சல் இல்லாமல் சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். அதையடுத்து, தாலுகா அலுவலகங்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனாலும் மாணவர்கள் சிறப்பு முகாம்களில் அலைகழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்த சூழ்நிலையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,நேற்று உழவர்கரை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம் மாணவர்களை தேவையில்லாத ஆவணங்களை கேட்டு,எதற்காக அலைகழிக்கின்றீர்கள். ஏன் காலத்தோடு சான்றிதழ் வழங்கவில்லை என சராமரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
இது குறித்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,கூறும்போது,சிறப்பு முகாம்கள் நடத்தியும் எந்த காட்சியும் மாறவில்லை.
தாலுகா அலுவலகங்களில் காத்துகிடப்பதை போன்று இப்போது சிறப்பு முகாம்களில் பெற்றோர்கள் மாணவர்களுடன் காத்திருக்கின்றனர். சிறப்பு முகாம்களில் குவியும் மாணவர்கள்,பெற்றோர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது.அப்படியே சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்தாலும் அலைகழித்து தான் தருகின்றனர்.
கேட்டால் பணியாளர் பற்றாக்குறை என்கின்றனர்.மற்ற துறைகளில் டெபுடேஷன் அடிப்படையல் அரசு ஊழியர்களை நியமித்து வழங்கி இருக்கலாம்.ஆனால் அதையும் செய்யவில்லை.
இப்படி இருந்தால் மாணவர்களால் எப்படி காலத்தோடு விண்ணப்பிக்க முடியும்.முதல்வரின் கவனத்திற்கு கொண்டு நிரந்தர தீர்வு காண முடிவு செய்துள்ளேன் என்றார்.