ADDED : ஜூலை 17, 2024 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை தாங்கி, காமராஜர் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். ஆசிரியை குப்பம்பாள் வரவேற்றார். ஆசிரியை பத்மாவதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பள்ளி மோலாண்மை குழு உறுப்பினர் உதயகுமார், ஆசிரியர் ராமதாசு ஆகியோர் காமராஜர் வாழ்க்கை வரலாறு பற்றி பேசினர். அதனை தொடர்ந்து, மாணவர்கள் காமராஜர் வேடம் அணிந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.ஆசிரியர் இந்திராகாந்தி நன்றி கூறினார்.