காமராஜர் பிறந்தநாள் விழா என்.ஆர்., காங்.,கொண்டாட்டம்
காமராஜர் பிறந்தநாள் விழா என்.ஆர்., காங்.,கொண்டாட்டம்
ADDED : ஆக 10, 2026 07:33 PM
புதுச்சேரி: என்.ஆர்., காங்., சார்பில் காமராஜர் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் அன்புகுமார் வரவேற்றார். சேலம் முன்னாள் எம்.எல்.ஏ., அருள், திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி, தேசிய மீனவர் பேரவை புதுச்சேரி பிற்படுத்தபட்டோர் ஆணைய உறுப்பினர் இளங்கோ, தமிழ்நாடு யாதவர் சங்க தலைவர் ராமச்சந்திரன், நடிகர் அஜய் ரத்னம், ஜாக்குவார் தங்கம், கரூர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினர்.
விழாவில், புதுச்சேரி அமைச்சர்கள் ராஜவேலு, மல்லாடி கிருஷ்ணராவ், சிவகொழுந்து, எம்.எல்.ஏ.,க்கள் திருமுருகன், ஆறுமுகம், வையாபுரி மணிகண்டன், நாராயணசாமி, அய்யப்பன், மோகன்தாஸ் வாழ்த்தி பேசினர்.
விழாவில், இயக்குனர் சீனு ராமசாமி, சமூக சேவர்கள் பாலம் கல்யாணசுந்தரம், ேஷாபனா ரமேஷ் ஆகியோருக்கு என்.ஆர்., விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பொது செயலாளர் ஜெயபாலன், மாநில செயலாளர் ஜவகர், முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பலரும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழக அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தினர். ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி நன்றி கூறினார்.
