ADDED : மே 25, 2024 04:02 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில் காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி பிராமண சமூகம், சாய் சங்கர பக்த சபா மற்றும் பரமாச்சாரியார்களின் பக்தர்கள் சார்பில், கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில், காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா நேற்று மாலை ஆவஹந்தி ஹோமத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, கோ பூஜை, அஸ்வ பூஜையும், புதுச்சேரி சீனுவாச பாகவதர் பஜனை நடந்தது. காஞ்சி மகா பெரியவர் உருவப்படம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
