/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண்தானம் இருவார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
கண்தானம் இருவார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 07, 2024 07:00 AM

புதுச்சேரி : புதுச்சேரி ஜோதி கண் வங்கி மற்றும் அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
காமராஜ் சாலை, ராஜா தியேட்டரில், துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை என்.சி.சி., பயிற்சி அதிகாரி இமன் சமந்தா, எஸ்.பி., செல்வம், மாவட்ட ஆளுநர் வைத்தியநாதன், டாக்டர் வனஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஊர்வலத்தில் மாணவர்கள், கண்தானம் பற்றி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
ஊர்வலத்தில் ஜிப்மர் கண் வங்கி, அரவிந்த் கண் வங்கி, பிம்ஸ் கண் வங்கி, புதுச்சேரி கண் மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ கழகம் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. டாக்டர்கள் நாராயணன், சீனிவாசன், அனுராதா, செந்தில்நாராயணன் உள்ளிட்ட ரோட்ட சங்கங்கள் நிர்வாகிகள், செவிலியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மற்றும் என்.சி.சி., மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.