sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காரைக்கால் - சென்னைக்கு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்

/

காரைக்கால் - சென்னைக்கு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்

காரைக்கால் - சென்னைக்கு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்

காரைக்கால் - சென்னைக்கு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம்


ADDED : ஏப் 08, 2024 05:38 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காரைக்காலில் இருந்து சென்னைக்கு, பி.ஆர்.டி.சி., சார்பில், இன்று முதல் புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.

காரைக்காலில் இருந்து, சென்னைக்கு புதிய, 2 பிளஸ் 2 இருக்கை கொண்ட, சொகுசு பஸ்களை, பி.ஆர்.டி.சி., இன்று முதல் இயக்க திட்டமிட்டுள்ளது.

காரைக்காலில் இருந்து, மதியம் 2:15 மணிக்கு, இந்த பஸ் புறப்படுகிறது. இது இ.சி.ஆர் வழியாக, சென்னை, கோயம்பேட்டை, இரவு சென்றடையும். அதேபோல, சென்னை, கோயம்பேட்டில் இருந்து இரவு 10:30 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காரைக்காலை சென்றடையும்.

மேலும் காரைக்காலில் இருந்து, காலை 11:00 மணிக்கும், இரவு 10:00 மணிக்கும் புறப்படும் பஸ், திண்டிவனம் பை-பாஸ் வழியாக, சென்னை, கிளாம்பாக்கம் செல்கிறது.

மேலும் சென்னையில் இருந்து, காலை 7:00 மணிக்கும், இரவு 9:30 மணிக்கும் புறப்படும் பஸ், காரைக்காலுக்கு செல்கிறது. இதற்கு முன்பதிவுடன் சேர்த்து, பயண கட்டணம், ரூ.305. புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, இ.சி.ஆர் வழியாக நான்கு புதிய பஸ்களும், பை பாஸ் வழியாக ஒரு புதிய பஸ்சும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us