/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா நிறைவு
/
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா நிறைவு
ADDED : ஜூலை 22, 2024 01:56 AM

காரைக்கால் : காரைக்கால் மாங்கனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காரைக்கால் பாரதியார் சாலையில் காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் மாங்கனி திருவிழா கடந்த 19ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது.
மறுநாள் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதியார் பரமதத்தர் திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது.
பரமதத்தர் தனது பணியாளர்களிடம் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல், சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவராக அவதரித்து, பவழக்கால் விமானத்தில் வீதியுலா வரும் போது பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது.
ஒரு மாதம் நடக்கும் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது. இதற்காக பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பிச்சாண்டவர், அம்பாள், வள்ளி தெய்வானை சமேதராக முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி உற்சவர்களுக்கு சந்தனம், மஞ்சள், பால், தேன், பன்னீர், அண்ணம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.