தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்கால் மாவட்ட காங்.,தலைவர் ராஜினாமா

காரைக்கால் மாவட்ட காங்.,தலைவர் ராஜினாமா

காரைக்கால் மாவட்ட காங்.,தலைவர் ராஜினாமா


UPDATED : மே 08, 2026 08:25 PM

ADDED : மே 08, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 08:25 PM ADDED : மே 08, 2026 08:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: புதுச்சேரி மாநில காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ,காரைக்கால் மாவட்ட தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காங்., படுதோல்வி அடைந்தது. இதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட காங்., தலைவராக இருந்த சந்திரமோகன் தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து அவர் காரைக்கால் மாவட்ட காங்., மற்றும் மக்களின் நலனுக்காக என் பணியை சிறப்பாக செய்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கு முழு பொறுப்பேற்று , மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து சந்திரமோகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது காங்., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us