/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
/
காரைக்கால் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
காரைக்கால் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
காரைக்கால் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
ADDED : பிப் 22, 2025 04:37 AM

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேர், கடந்த 26ம் தேதி கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைது செய்தனர். காயமடைந்த 3 மீனவர்கள் இலங்கை மருந்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும், விசைப்படகை ஒட்டியவருக்கு ரூ.40 லட்சம் அபராதம் மற்றும் 9 மாதம் சிறை தண்டனை விதித்தனர்.
இதை கண்டித்து, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 11ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது தொடர்பாக காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில், மீனவர்களுடன் கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தது. மீன்வளத்துறை துணை இயக்குனர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதில், மீனவர்களை பாதுகாப்புடன் அழைத்து வரவேண்டும். காயமடைந்த மீனவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும், வீசைப்படகுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொகையை ரத்து செய்ய வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கூறுகையில், காயமடைந்த மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர புதுச்சேரி அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. சிகிச்சையில் இருக்கும் மீனவர்களையும் இந்திய அரசு சார்பில் கண்காணித்து வருகின்றனர். வரும் 24ம் தேதி நீதி விசாரணையின் போது நல்ல அறிவிப்பு வரும்' என்றார்.
இதனை ஏற்று, மீனவர்கள் தற்காலிக போராட்டத்தை ஒத்திவைத்தனர்.