/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி
/
புதுச்சேரியில் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி
புதுச்சேரியில் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி
புதுச்சேரியில் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி
ADDED : ஆக 20, 2024 05:19 AM

புதுச்சேரி: கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணியின் கார்த்திக்ராஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியுடன் நடத்தப்பட்டுவரும் பிரீமியர் லீக் கிரிகெட் போட்டி, கடந்த 5ம் தேதி துத்திப்பட்டு சீகெம் ஸ்டேடியத்தில் துவங்கியது, 23ம் தேதி வரையில் பகல் இரவு ஆட்டமாக நடந்து வருகிறது. புதுச்சேரி ஒயிட் டவுன் ட்ராப்தாட் ஜென்ட்ஸ், வில்லியனுர் மோஹித் கிங்ஸ், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ், காரைக்கால் நைட் ரைடர்ஸ், மாகி மெகலோ ஸ்டைகர்ஸ், ஏனாம் ராயல்ஸ் என 6 அணிகள் பங்கு பெற்றுள்ளன.
நேற்று மதியம் 2:45 மணிக்கு தொடங்கிய போட்டியில் காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணியும் ஏனாம் ராயல்ஸ் அணியும் ஆடின. முதலில் ஆடிய ஏனாம் அணி 18.2 ஓவரில் 161 ரங்களுக்கு ஆட்டம் இழந்தது. நேயம் ஷியாம் 38 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து ஆடிய காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணியின் கார்த்திக்ராஜா 31 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தொடர்ந்து, நேற்று மாலை 6:45 மணிக்கு தொடங்கிய போட்டியில், ஓயிட் டவுன் ட்ராப்தாட் ஜென்ட்ஸ் மற்றும் மாேஹ மெகலோ ஸ்டைகர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மாகி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. ரிதேஷ் குட்கே 49 பந்துகளில் 73 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து ஆடிய வைட் டவுன் ட்ராப்தாட் ஜென்ட்ஸ் அணி 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 174 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜே பாண்டே 52 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார், ஆகாஷ் கார்கவே 53 பந்துகளில் 83 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.