/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆரில் காவு வாங்கும் கருவடிக்குப்பம் வளைவு; தொடரும் உயிரிழப்பு தடுக்க நடவடிக்கை தேவை
/
இ.சி.ஆரில் காவு வாங்கும் கருவடிக்குப்பம் வளைவு; தொடரும் உயிரிழப்பு தடுக்க நடவடிக்கை தேவை
இ.சி.ஆரில் காவு வாங்கும் கருவடிக்குப்பம் வளைவு; தொடரும் உயிரிழப்பு தடுக்க நடவடிக்கை தேவை
இ.சி.ஆரில் காவு வாங்கும் கருவடிக்குப்பம் வளைவு; தொடரும் உயிரிழப்பு தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : மே 08, 2024 01:34 AM

புதுச்சேரி: இ.சி.ஆரில் கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே உள்ள வளைவில், வாய்க்கால் சிலாப்பில் பைக் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
சேலம் ஆத்துார் டவுன், பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்தவர் குமார், 27; பெரிய காலாப்பட்டில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள சாசன் கம்பெனியில் உற்பத்தி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 5ம் தேதி மாலை தனது நண்பர் சிவசக்தி என்பவருடன் சன்டே மார்க்கெட் சென்று விட்டு இரவு 1 மணிக்கு, பல்சர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.
இ.சி.ஆர்.வழியாக நேற்று முன்தினம் அதிகாலை 1:20 மணிக்கு, கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகில் பாரதி நகர் 6வது குறுக்கு தெரு சந்திப்பு அருகே வேகமாக சென்றபோது, சாலையோர ரிப்ளெக்டர் போர்டில் பைக் லேசாக மோதியது.
அதில் நிலைதடுமாறியதில் அருகில் திறந்து கிடந்த வாய்க்கால் சிலாப் மீது இருவரும் விழுந்தனர்.
அதில் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடவடிக்கை தேவை
கொக்குபார்க் சிக்னலில் இருந்து நேராக செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலை, சிவாஜி சிலை அருகில் காமராஜர் மணிமண்டபம் கட்டப்பட்டதால், சாலை சற்று தெற்கு பக்கமாக 'அரை விட்டம்' போல வளைந்து, கோட்டக்குப்பத்தில் இருந்து நேராக செல்கிறது.
கொக்கு பார்க்கில் இருந்து நேராக உள்ள சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள், சிவசக்தி மகால் அருகே திடீரென வளைவு வருவது தெரியாமல் சாலையோர தடுப்பு கட்டை, மின்கம்பங்களில் மோதி உயிரிழப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் இதுவரை 5க்கும் மேற்பட்டோர் பைக் மின் கம்பம், தடுப்பு கட்டைகளில் மோதி உயிரிழந்துள்ளனர். 4 கார்கள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. தொடர்ந்து உயிர்பலி வாங்கி வரும் இப்பகுதியை ஆய்வு செய்து உயிரிழப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

