/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
/
கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
ADDED : ஆக 25, 2024 05:57 AM

புதுச்சேரி: காலப்பட்டு புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பி.எம். கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தலைமை விருந்தினராக பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு கலந்து கொண்டு, கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக பல்கலைக்கழக பதிவாளர் ரஜ்னீஷ் பூட்டானி, ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹிடோமி குவயாமா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பள்ளி முதல்வர்சுரேந்தர குமார் சைனி பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
தொடர்ந்து இந்தியாவின் பாரம்பரிய பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.