ADDED : மே 06, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : விவசாயியை கடத்தி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஏம்பலம் குளத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன், 60; இவர் ஏம்பலம் பகுதியில் தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும், நல்லாத்துார் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் மாலை நிலத்திற்கு சென்ற ஜெயராமனை அய்யனார் ஆட்களை வைத்து கடத்தி சென்று, பணம் கேட்டு மிரட்டினார்.
வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி அனுப்பினர்.
இதுகுறித்து ஜெயராமன் புகாரின்பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.