/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா
/
கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா
ADDED : ஏப் 25, 2024 03:35 AM

வில்லியனுார்: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நடந்தது.
வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது.கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
மே 9ம் தேதி வரை விழா நடக்கிறது.
இதில் முக்கிய விழாவாக நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில்திருநங்கைகளுக்கு அழகி போட்டியும், அதனை தொடர்ந்து இரவு 9:30 மணியளவில் கூத்தாண்டவர் சுவாமிக்கு தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
அதனை தொடர்ந்து நேற்று காலை 9:30 மணியளவில் கூத்தாண்டவர் தேர் திருவிழா நடைபெற்றது. அமைச்சர் சாய்சரவணன்குமார் தேரை வடம் பிடித்து துவக்கிவைத்தார். தேர் கிராம முக்கிய வீதிகள் வழியாக மாலை 4:30 மணியளவில் அழுகள மைதானத்திற்கு சென்றடைந்தது.
மே. 9ம் தேதி இரவு 8:00 மணியளவில் படுகாலம் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தலைமையில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்துவருகின்றனர்.

