/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரான்ஸ் தமிழ் கலாசார மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு
/
பிரான்ஸ் தமிழ் கலாசார மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு
பிரான்ஸ் தமிழ் கலாசார மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு
பிரான்ஸ் தமிழ் கலாசார மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு
ADDED : ஆக 04, 2024 04:26 AM

புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டில், திருவள்ளுவர் மற்றும் காந்தி சிலை அமைத்த, அந்நாட்டின் வொரயால் தமிழக் கலாசார மன்ற செயற்குழு உறுப்பினர்களுக்கு, வெங்கடேசன் அறக்கட்டளை சார்பில், பாராட்டு விழா நடந்தது.
வெங்கட்டா நகர், தமிழ்ச் சங்கத்தில் நடந்த விழாவிற்கு, கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஆறுமுக பெருமாள், பூங்குழலி ஆகியோர் வரவேற்றனர். புதுச்சேரி தமிழச் சங்க தலைவர் முத்து முன்னிலை வகித்தார்.
வள்ளலார் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், பார்த்தசாரதி, தமிழ்ச் சங்க செயலாளர் சீனு மோகன்தாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர் லட்சுமிநாராயணன், மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் பிரான்ஸ் வொரயால் தமிழ்ச் கலாசார மன்ற செயற்குழு உறுப்பினர்களான இலங்கை வேந்தன் பாண்டுரங்கன், இயக்குநர் ரவி குணாவதி மைந்தன், ஒருங்கிணைப்பாளரர் முனுசாமி ஆகியோரை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் சீனுவாசன், கோவிந்தராசு, பாலசுப்ரமணியன், கவுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.