/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'மூடா' முறைகேடு ஆவணங்கள் வெளியீடு சித்தராமையாவுக்கு குமாரசாமி 'கிடுக்கிப்பிடி'
/
'மூடா' முறைகேடு ஆவணங்கள் வெளியீடு சித்தராமையாவுக்கு குமாரசாமி 'கிடுக்கிப்பிடி'
'மூடா' முறைகேடு ஆவணங்கள் வெளியீடு சித்தராமையாவுக்கு குமாரசாமி 'கிடுக்கிப்பிடி'
'மூடா' முறைகேடு ஆவணங்கள் வெளியீடு சித்தராமையாவுக்கு குமாரசாமி 'கிடுக்கிப்பிடி'
ADDED : ஆக 24, 2024 05:17 AM

பெங்களூரு: 'மூடா' முறைகேட்டில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, சில ஆவணங்களை மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி வெளியிட்டுள்ளார்.
காங்., கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 14 வீட்டு மனைகள் வழங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், தன் மனைவியிடம் கையகப்படுத்தப்பட்ட 3.16 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக, சட்டப்படி தான் 14 மனைகள் வழங்கப்பட்டன என, முதல்வர் கூறி வருகிறார்.
இந்நிலையில், மாநில ம.ஜ.த., தலைவரும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான குமாரசாமி, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் மனைவியிடம் கையகப்படுத்திய நிலத்திற்கு மாற்றாக, 40:60 விகிதத்தில் மனை வழங்கப்படும் என, முதல்வரின் மனைவிக்கு, 'மூடா' தெரிவித்தது. இதை ஏற்க அவர் மறுத்து விட்டார்.
கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு ஈடாக அதே அளவு மனைகள் வழங்க வேண்டும் என, முதல்வரின் மனைவி, 'மூடா'விற்கு கடிதம் எழுதியுள்ளார். பின், 50:50 விகிதத்தில் மனைகள் வழங்கும்படி கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் மனைவி கூறுவது போல், இது வெறும் குறிப்பா அல்லது உத்தரவா? இதற்கு, 'சூப்பர் முதல்வர்' தான் பதில் அளிக்க வேண்டும். உங்கள் மனைவி கடிதம் எழுதியபோது, நீங்கள் விதான் சவுதாவின் உள்ள முதல்வர் இருக்கையில் அமர்ந்து இருந்தீர்கள். அப்போது, மூடா அதிகாரிகள் என்ன தான் செய்ய முடியும்?
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.