/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேலியமேடு கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்
/
சேலியமேடு கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : மார் 09, 2025 03:43 AM

பாகூர் : சேலியமேடு கிராமத்தில் செங்கழுநீர் மாரியம்மன், செல்வ விநாயகர் உள்ளிட்ட 9 கோவில்களின், மகா கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.
பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தில் செங்கழுநீர் மாரியம்மன், செல்வ விநாயகர், திருமுறைநாயகி உடனுறை ஜோதி லிங்கேஸ்வரர், சிவகாம சுந்திரி உடனுறை ஆனந்த நடராஜர், பக்த ஆஞ்சநேயர், குடிதாங்கி அம்மன், பரந்துகட்டி அய்யனார், ஐயப்பன், கோகுல கண்ணன் கோவில்கள் உள்ளது. இக்கோவில்களின் கும்பாபிஷேக நாளை (10ம் தேதி) நடக்கிறது.
விழா கடந்த 6ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று மாலை 5:00 மணிக்கு முதல் கால பூஜை துவங்கியது. இன்று (9ம் தேதி) காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, சிறப்பு சோம கும்ப பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடக்கிறது.
நாளை (10ம் தேதி) காலை 4.3௦: மணிக்கு நான்காம் கால யாக பூஜை, கோ பூஜை நடக்கிறது.
காலை 6:15 மணிக்கு, பரந்துகட்டி அய்யனார், 6:45 மணிக்கு குடிதாங்கி அம்மன், 7:00 மணிக்கு ஆஞ்சநேயர், கோகுல கண்ணன், 10:00 மணிக்கு செங்குழுநீர் மாரியம்மன், திருமுறை நாயகி, ஜோதிலிங்கேஸ்வரர், ஐயப்பன், நடராஜர் கோவில்களின் கும்பாபிஷேகம், காலை 10:25 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி உட்பட பலர் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன், திருப்பணி குழுவினர், விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.