ADDED : மே 30, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் ரயில் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பகுதியில் ரயிலில் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக நிரவி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்து கிடந்தவர் பட்டினச்சேரி, கீழையூர், வடக்கு சுனாமி நகரை சேர்ந்த ரத்தினவேல் மகன் சதீஷ்குமார், 38, என்பதும், இவர் மீன்பிடித் துறைமுகத்தில் லோடுமேன் வேலை செய்து வருவதும், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நேற்று முன்தினம் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. இதுக்குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
